ஆடம் ராஸிங்டன் அதிரடி, வான் டெர் மெர்வியின் சுழலால்

ஆடம் ராஸிங்டன் அதிரடி, வான் டெர் மெர்வியின் சுழலால்
ஆடம் ராஸிங்டன் அதிரடி, வான் டெர் மெர்வியின் சுழலால்

ஆடம் ராஸிங்டன் அதிரடி, வான் டெர் மெர்வியின் சுழலால்
 
சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அபார வெற்றி
 
124 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது
 
கெபெர்ஹா எஸ்ஏ டி கிரிக்கெட் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி.
 
டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் ராஸிங்டன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். மறுமுனையில் ஜோர்டான் ஹெர்மன் நிதானமாக பேட் செய்தார். பவர்பிளேவில் 67 ரன்கள் விளாசப்பட்டது. ராஸிங்டன் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். அவரது மட்டை வீச்சால் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 8.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
 
அடுத்த பந்திலேயே ஆடம் ராஸிங்டன் ரன் அவுட் ஆனார். 30 பந்துகளை சந்தித்த ஆடம் ராஸிங்டன் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு ஜோர்டான் ஹெர்மனுடன் இணைந்து ராஸிங்டன் 101 ரன்கள் எடுத்தார். சீராக ரன்கள் சேர்த்த ஜோர்டான் ஹெர்மன் 44 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து பிரிட்டோரியஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.  
 
அப்போது எய்டன் மார்க்ரம் 30,  டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன் சேர்த்திருந்தனர். சிறிது நேரத்தில் மழை நின்ற பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும் உத்வேகத்தை இழக்காமல் விளையாடிய சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. எய்டன் மார்க்ரம் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
211 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ரால்ஃப் வான் டெர் மெர்வின் இடது கை சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 14.4 ஓவர்களில்86 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 32 பந்துகளை மீதம் வைத்து 124 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வெற்றி பெற்றது. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக வியான் முல்டர் 29, கைல் மேயர்ஸ் 11 ரன்கள் சேர்த்தனர். மத்தேயு ப்ரீட்ஸ்கே 3, ஹெய்ன்ரிச் கிளாசன் 1, குவிண்டன் டி காக் 0, ஜேசன் ஹோல்டர் 7, டுவைன் பிரிட்டோரியஸ் 3, கீமோ பால் 7, சுப்ரயன் 4, அகிலா தனஞ்ஜெயா 4 ரன்களில் நடையை கட்டினர். கேசவ் மகாராஜ் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
 
வான் டெர் மெர்வ் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வேட்டையாடினார். ஸ்மட்ஸ், எய்டன் மார்க்ரம், மார்கோ யான்சன், மேசன் கிரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.  
சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்ற அந்த அணி 17 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்து பட்டியலில் 2-வது இடதுக்கு முன்னேறியது. அதேவேளையில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் 4-வது தோல்வியை பதிவு செய்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
 
ஆட்ட நாயகனாக தேர்வான ரால்ப் வான் டெர் மெர்வ் கூறும்போது, “ஆட்டம்
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரசிகர்களின் ஏற்படுத்திய அதிர்வலை நம்பமுடியாததாக இருந்தது. சரியான திசையில் பந்துகளை வீசியது எனது அதிர்ஷ்டம். நாம் நினைத்தபடி ஆட்டம் செல்லும் போது போட்டியின் இரவு சிறப்பானதாக இருக்கும். நான் இன்னும் ஒன்றிணைந்து குழுவாக விளையாடுவதையே ரசிக்கிறேன். கெபர்ஹாவில் இவ்வளவு பெரிய ரசிகர்கள்  கூட்டத்திற்கு முன்னால் விளையாடுவது அதிர்ஷ்டம்" என்றார்.
 
எஸ்ஏ டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் - பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தை போ ஜியோ சினிமா செயலி, ஸ்போர்ட்ஸ் 18–1, ஸ்போர்ட்ஸ் 18 கேல் மற்றும் கலர்ஸ் தமிழ் சானலில் காணலாம்.