ரஜினிகாந்த், கமல் ஹாசன் அரசியல்: விஜயசாந்தி அறிவுரை

ரஜினிகாந்த், கமல் ஹாசன் அரசியல்: விஜயசாந்தி அறிவுரை

தெலுங்கு, தமிழ் ஆகிய மொழியில் ஆக்ஷன் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி, அரசியலில் கால் பதித்து உள்ள விஜயசாந்தி நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பயணம் குறித்து கூறியதாவது: 

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கானாவுக்காக இருபது ஆண்டுகள் போராடி இருக்கிறேன்.

இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது. ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். நிற்கவேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.