சமையல் போட்டி

சமையல் போட்டி

சுவையின் சாரத்தை தேடி ஆராயும் “அஜி-னோ-மோட்டோ சமையல் போட்டி”

~ இறுதிப்போட்டியில் 10 இல்லத்தரசிகள் தங்கள் சமையல் திறனை வெளிப்படுத்த பிரபல நடிகை ஸ்னேகா பிரசன்னா நடுவராக செயல்பட்டார் ~

~ முதல் 3 வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசும், வெற்றிக் கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன ~

சென்னை: உலகில் உணவு தயாரிப்புகளுக்கு மிகப்பிரபலமான சமையல் சுவையூட்டியான உமாமி சுவையை வழங்கும் இடுபொருளான அஜினோமோட்டோ, உமாமி கிச்சன் சேலஞ்ச்” என்ற பெயரில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வை இன்று நடத்தியது. சென்னை, தி நகரில், ஹோட்டல் ஜிஆர்டி கன்வென்ஷன் சென்டரில் அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட முதல் 10 போட்டியாளர்கள் கலந்துகொண்டு, அஜினோமோட்டோவை ® [MSG] பயன்படுத்தி செய்யும் உணவு தயாரிப்பில் தங்களது மெச்சத்தக்க திறமையை பலரும் பாராட்டும்படி காட்சிப்படுத்தினர்.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக இல்லத்தரிசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து திறன்மிக்க மூன்று வெற்றியாளர்களை திரைப்பட நட்சத்திரம் ஸ்னேகா பிரசன்னா தேர்வுசெய்தார். அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட்-ன் இயக்குநர் அட்சுஷி மிஷுகு மற்றும் இந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் திரு. கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோரும் இப்போட்டியில் ஸ்னேகாவுடன் இணைந்து நடுவர்களாக செயலாற்றினர்.

அஜினோமோட்டோவை பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தமான உணவுப்பொருட்களை சமைப்பதற்காக சென்னையைச் சேர்ந்த இல்லத்தரிசிகளை ஈடுபடுத்துவதன் வழியாக ஒரு தனித்துவமான வழிமுறையில் இயற்கையான சுவையூட்டியான அஜினோமோட்டோ குறித்து நுகர்வோர்களுக்கு தகவலளிக்கவும் அவர்களின் கவனத்தை ஈர்த்து ஈடுபாடுகொள்ளச் செய்யவும் இப்போட்டியானது ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பங்கேற்க ஏறக்குறைய 100 ஆர்வமிக்க இல்லத்தரிசிகள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்களுள், “உமாமி கிச்சன் சேலஞ்ச்” நிகழ்வில் அவர்களது சமையல் திறனை நேர்த்தியாக வெளிப்படுத்துவதற்காக 10 நபர்கள் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டிருந்தனர்.

உத்வேகமும், பரபரப்பும் ஒருசேர கலந்திருந்த இப்போட்டியின் இறுதிச்சுற்றில் அதிரவைக்கும் அற்புத சுவையோடு அஜினோமோட்டோவின் துணையோடு இந்த 10 இல்லத்தரிசிகளும் சிறப்பான உணவு தயாரிப்புகளை சமைத்து வழங்கினர். இவர்களது உற்சாகமூட்டும் சுவை மீதான திறனின் அடிப்படையில், திரைப்பட நட்சத்திரமான ஸ்னேகா பிரசன்னாவும் மற்றும் அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இப்போட்டியின் வெற்றியாளர்களை தேர்வுசெய்தனர்.

இப்போட்டியின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த திரைப்பட நட்சத்திரம் ஸ்னேகா பிரச்சனா பேசுகையில், “தங்களது ரெசிபிகளுக்கு கூடுதல் சுவையை சேர்க்க இப்போட்டியில் பங்கேற்றவர்கள் திறம்பட செயலாற்றியதை காண்பதில் நான் வியப்பில் ஆழ்ந்தேன். சமைத்து தயாரித்து வழங்கிய அந்த உணவுப்பொருட்களுக்கு அஜினோமோட்டோ கூடுதல் வாசனையையும் மற்றும் சுவையையும் சேர்த்து தந்ததை என்னால் காண முடிந்தது. இப்போட்டியின் வெற்றியாளர்கள் தரநிலைகளை சமையலில் பேணியதோடு தாங்கள் தயாரித்த உணவுப்பொருட்களை பரிமாறுகிறபோது புத்துணர்ச்சி குன்றாமல் சுவைமிக்கதாக அவைகள் இருப்பதை உறுதிசெய்வதிலும் வெற்றிகண்டனர்”, என்று கூறினார்.

அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட்-ன் இயக்குநர் அட்சுஷி மிஷுகு பேசுகையில், “இல்லத்தரிசிகள் மத்தியில் இத்தகைய போட்டிகளின் துடிப்பான உணர்வை ஊக்குவிக்க நாங்கள் விரும்பினோம். அஜினோமோட்டோவை பயன்படுத்துவதன் மூலம் உணவுப்பொருட்களின் சுவையில் உண்மையான சாரத்தை இப்போட்டியில் பங்கேற்றவர்கள் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தினர். இந்த போட்டியின் வழியாக, ‘நன்றாக உண்ணுங்கள்; நன்றாக வாழுங்கள்’ என்ற எமது நிறுவனத்தின் விருதுவாக்கை நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று கூறினார்.

அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட்-ன் சந்தையாக்கல் மேலாளர் திரு. கோவிந்த பிஸ்வாஸ் பேசுகையில், “இல்லத்தரிசிகள், அவர்களது சமையல் திறன்களை மேம்படுத்தவும் மற்றும் அஜினோமோட்டோவை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் திறன்களின் சுய விவரக்குறிப்பை விரிவாக்கவும் அவர்களை ஊக்குவிப்பதற்காக இப்போட்டியானது ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. அத்துடன், மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வுகளைக் கொண்டு பல்வேறு சர்வதேச அமைப்புகளால் அஜினோமோட்டோவின் (MSG) பாதுகாப்பு தன்மையானது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டி நிகழ்வின் வழியாக, எமது தயாரிப்பு தரநிலைகளை முன்னிலைப்படுத்துவதும் எமது நோக்கமாகும்,” என்று கூறினார்.

நொதிப்பு செய்முறை வழியாக இயற்கை ஆதாரங்களிலிருந்து அஜினோமோட்டோ எவ்வாறு தயாரிக்கப்படுகிறது மற்றும் மாறுபட்ட உமாமி சுவையை இன்னும் மேம்படுத்த ஒரு இயற்கை சுவையூட்டியான இது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் விளக்கிக்கூறப்பட்டது. உமாமி என்பது மனித உடலில் இருக்கின்ற ஐந்து அடிப்படை சுவைகளுள் ஒன்றா