தமிழக விவசாயிகளுக்கு நடிகை நக்மா அதரவு

தமிழக விவசாயிகளுக்கு நடிகை நக்மா அதரவு
Actress Nagma supports Tamil Farmers protesting in New Delhi

புது டெல்லி: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு நடிகையும், மகிளா காங்கிரஸ் நிர்வாகியுமான நக்மா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நக்மா கூறியதாவது:

"விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது. விவசாயிகளை ஆதரிக்க வேண்டியது நமது கடமை. விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யபட்டது. அதேபோல், தற்போது ஏன் பா.ஜ.க அரசு செய்யவில்லை?” என்று அவர் கூறினார்.

Actress Nagma supports Tamil Farmers protesting in New Delhi