சோதனையில் ஏன் ஆவணத்தை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்

சென்னை: நேற்று காலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகளில் வருமானத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ கூறியதாவது:
சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான். யார் வரி கட்டவில்லையோ, பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை தான் செய்யும். அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியது தவறல்ல.
சோதனையின்போது அமைச்சரின் உதவியாளர் முக்கிய ஆவணத்தை தூக்கி ஓடியுள்ளார். உங்களிடம் தவறு இல்லையென்றால் ஏன் ஆவணத்தை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்?
எங்களிடம் எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது என்று ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியதானே? இவர்களிடம் தவறு இருக்கிறது. அது வெளியே தெரிந்து விட கூடாது என்று அதை மறைக்க முயன்றுள்ளனர் என்று அவர்களது செயல்பாடுகளே காட்டி இருக்கிறது.
வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. வழக்கு போடுகிறது. ஆனால் அதே நபர்களுக்கு அரசாங்கம் உதவியும் செய்கிறது. தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. அவர் மீது வழக்கும் உள்ளது. இந்த நிலையில் அவருக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு குஷ்பு கூறினார்.