டி.டி.வி தினகரனுக்கு சரத்குமார் ஆதரவு

டி.டி.வி தினகரனுக்கு சரத்குமார் ஆதரவு
Actor Sarathkumar supports TTV dinakaran

சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.(அம்மா) கட்சி சார்பில் சசிகலாவின் உறவினரான டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், டி.டி.வி தினகரனுக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார், “தற்போது ஏதே ஒரு மனஸ்தாபத்தில் பிரிந்து இருக்கும் அதிமுகவினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே ஆதரவு. வேறு யாரும் இதில் உள்ளே நுழைந்துவிடக்கூடாது” என்றார்.

Actor Sarathkumar supports TTV dinakaran