அதிரடி காட்சிகள் நிறைந்த ‘செம தமிரு’ திரைப்படம்:

அதிரடி காட்சிகள் நிறைந்த  ‘செம தமிரு’ திரைப்படம்:
அதிரடி காட்சிகள் நிறைந்த ‘செம தமிரு’ திரைப்படம்

அதிரடி காட்சிகள் நிறைந்த ‘செம தமிரு’ திரைப்படம்:

 

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

 

----------------

 

நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ வழங்கும் இத்திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சன்டே சினி ஜம்போவில் 25 ஜூலை, 2021 அன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும்

 

 

 

 

 

சென்னை, ஜூலை, 24– தமிழகத்தின் இளமைமிக்க பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த மாதத்திற்கான திரைப்படமாக அதிரடி திரைப்படம் ‘செம திமிரு’ ஒளிபரப்பாக உள்ளது. துருவா சர்ஜா மற்றும் ரஷ்மிகா மந்தன்னா ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் அதன் நன்கு திட்டமிடப்பட்ட அதிரடி காட்சிகளுடன் இந்த வார இறுதியில் உங்களை உற்சாகப்படுத்தும் என்பது உறுதி. இந்த திரைப்படத்தை நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ வழங்குகிறது. சன்டே சினி ஜம்போவில் வரும் 25 ஜூலை, 2021, ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணிக்கும், மீண்டும் மாலை 4.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ள ‘செம திமிரு’ திரைப்படத்தை காண நீங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

 

 

 

கன்னடத்தில் வெளியான போகாரு என்ற திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் ‘செம திமிரு’ என்று வெளிவந்தது. இந்த படத்தின் கதை, பொதுமக்கள் நீதிக்கான ஒரு ரஷ்ய போராட்டம் பற்றியதாகும். இந்தப் படத்தின் கதாநாயகன் தாயின் அன்பிற்காக ஏங்குகிறார். அதுவே எப்போதும் சிறப்பு என்று கருதுகிறார். நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிபூர்வமான சம்பவங்களின் சரியான கலவையான இந்தப் படம் ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்கு உடன் வார இறுதியில் பார்வையாளர்களுக்கு சரியான விருந்து படைக்கும்.

 

 

 

இந்த படத்தை இயக்குனர் நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். இதில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் 2 சக்திவாய்ந்த கதாபாத்திரங்களை தவிர, சிக்கனா, பி.ரவிசங்கர், ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் சம்பத் ராஜ், தனஞ்சய், கை கிரீனா, மோர்கன் அஸ்தே, தர்மா ஆகிய துணை நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக இருக்கும்.

 

 

 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும் பல சூழ்ச்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தை ஜூலை 25, 2021, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு காண தயாராகுங்கள்.

 

 

 

கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவந்திருக்கின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். பெண்களையும் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். 'இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும். வேலு நாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

 

 

 

வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.