SRM பல்கலைக்கழகத்தின் "Abhigyan 2018"

வடபழனியில் உள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ECE துறை ஒவ்வொரு வருடமும் Abhigyan என்கின்ற தேசிய அளவிலான கருத்தரங்கை நடத்துகிறது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக திரு. டாடா சுதாகர், விஞ்ஞானி 'F', தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவணம், சென்னை, மற்றும் மரியாதை விருந்தினராக திரு. செல்வ குமரேசன், தலைவர் - ஐஓடி - டிசிஎஸ் வருகை தந்திருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கப்பட்டது. முனைவர்.சி.கோமதி, துறைத்தலைவர், ECE, SRMIST அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். பின்பு முனைவர். அ.ஷர்லி எட்வர்டு, உதவி பேராசிரியர், அவர்கள் ABHIGYAN'18, மாநாட்டைப் பற்றி விளக்கினார். அதன் பிறகு முனைவர். க. துரைவேலு, Dean(E&T), SRMIST, வடபழனி அவர்கள் விருந்தினர்களுக்குப் பூச்செண்டு வழங்கி மரியாதை செலுத்தினர். பின்பு அவர் ABHIGYAN '18 மாநாட்டைப் பற்றியும் SRM மாணவர்களின் பற்றியும் பெருமிதமாகக் கூறினார்.
அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவருடைய பேச்சு மாணவர்களிடத்தில் உற்சாகத்தையும் தூண்டுதலையும் உருவாக்கியது. அதன் பின்பு திரு. செல்வ குமரேசன், தலைவர் - ஐஓடி - டிசிஎஸ் அவர்கள் சிறப்பு முகவுரையை வழங்கினார். அவர் வளர்ந்து வரும் ஐஓடி தொழில்நுட்பத்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தொழில் வாய்ப்புகளை பற்றி மிகத்தெளிவாக உரை நிகழ்த்தினார்.
இம்மாநாட்டில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பபட்டன. இறுதியாக டி. வைஷாலி, உதவி பேராசிரியர் அவர்கள் நன்றி உரையை வழங்கி மாநாட்டை நிறைவு செய்தார்.