அ.தி.மு.க. என்பது ஒரு கம்பெனி: துரைமுருகன்

அ.தி.மு.க. என்பது ஒரு கம்பெனி: துரைமுருகன்
AIADMK is a company says Durai Murugan

மதுரை: தி.மு.க. கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சி, ஜனாதிபதி தேர்தல் வரும் வரை இருக்குமா? என்பது சந்தேகமே? இது எனது அனுபவ கருத்து. அ.தி.மு.க. என்பது ஒரு கம்பெனி. அங்கு முதல்வர் என்ற மானேஜர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

தி.மு.க. தனது பலத்தை பயன்படுத்தி முடிந்தவரை மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நடைபெறவில்லை. காட்சிதான் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

AIADMK is a company says Durai Murugan