சேலத்தில் 720 சவரன் தங்க நகை கொள்ளை

சேலத்தில் 720 சவரன் தங்க நகை கொள்ளை
720 sovereign gold stolen from iron dealer house from Salem

சேலம்: சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் அங்குள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார், இந்நிலையில் விஜயலட்சுமி தன்னுடைய உறவினர்களுடன் திருப்பதி சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 720 சவரன் தங்க நகைகள் கொள்ளைப் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி கிட்சிபளையம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்தார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அப்போது பீரோ கதவு உடைக்கப்படாத நிலையில், வீட்டில் மறைவாக வைக்கப்பட்டிருந்த சாவியைக் கொண்டே நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர், இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரனையில், தங்களது வீட்டில் அடிக்கடி பூஜை நடத்துவது வழக்கம் என்றும், பூஜையை நடத்தும் சாமியார் தான் சிலதினங்களுக்கு முன் நடந்த பூஜையை அடுத்து திருப்பதிக்கு சென்றுவர அறிவுறுத்தினார் என்று விஜயலட்சுமி தெரிவித்தார்.

இதனையடுத்து, சாமியாருக்கும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடித்தி வருகின்றனர்.

720 sovereign gold stolen from iron dealer house from Salem