இமாச்சல பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து 44 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து 44 பேர் பலி
44 died in himachal bus accident

சிம்லா: உத்திரகாண்ட் மாநிலத்தின் விகாஸ் நகரில் இருந்து இமாச்சல பிரதேசத்தின் துனி கிராமத்திற்கு 46 பயணிகள் கொண்ட தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது, இன்று காலை 10.15 மணியளவில் இமாச்சல பிரேதேச சிம்லா மலைப் பாதையில் வந்தபோது, பேருந்து நடத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்பு அந்த பேருந்து அங்குள்ள "தன்ஸ்" ஆற்றில் கவிழ்ந்து நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 46 பேரில், 44 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் பலியானவர்களுக்கு உத்தரகாண்ட் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது, மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

44 died in himachal bus accident