விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 300 ஏரிகள் முழுமையாக நிரம்பின...பொதுப்பணித்துறை தகவல்
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 506 ஏரிகளில் 300 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 90 ஏரிகள் 75 சதவீதமும், 60 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. தொடர் கனமழை எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், பாசன ஏரிகள் முழுமையாக நிரம்ப தொடங்கியிருக்கின்றன.