சென்னையில் 2 கிலோ போதை பொருள் பறிமுதல்

சென்னையில் 2 கிலோ போதை பொருள் பறிமுதல்
2 Persons arrested in Chennai Airport for Smuggling drugs

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து கொழும்பு செல்ல இருந்த விமானம் ஒன்றில் போதை பொருள் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவலை அடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமத் மற்றும் தேவகோட்டையை சேர்ந்த இஸ்மாயில் ஆகியோரிடம் இருந்த 2கிலோ போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர், இதன் மதிப்பு சுமார் நான்கு கோடி ரூபாயாகும்.

அவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சென்னையிலிருந்து கொழும்புவிற்கு போதை பொருட்களை கொண்டு செல்வது உறுதிசெய்ததை அடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

2 Persons arrested in Chennai Airport for Smuggling drugs