இப்போது நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்

 இப்போது நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்

மத்திய பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் இனைந்து ஜனவரி 8 அதாவது இன்று நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்' நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு.

இந்த பாரத் பந்த் குறித்து அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள், மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 2-ஆம் தேதி தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்த நோட்டீசை அளித்ததும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படாததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.