பீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் : விராட்கோலி வேதனை

பீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் : விராட்கோலி வேதனை

திருவனந்தபுரம்:இந்தியா வெஸ்ட் அண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணையித்த 171 ரன்கள் இலக்கை வெற்றிரமாக சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஆகியோர் எளிய கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கூறுகையில்

கடைசி 4 ஓவர்களில் 40 முதல் 45 ரன்கள் வரை வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 30 ரன்கள் தான் எடுத்தோம். ஷிவம் துபே ஆட்டத்தால் தான் 170 ரன்களை தொட முடிந்தது. கடைசி கட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியினர் சிறப்பாக பந்து வீசி எங்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்கள். இதுபோல் மோசமாக பீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக இருக்காது.

கடைசி 2 ஆட்டத்திலும் எங்களது பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. மோசமான பீல்டிங்கே தோல்விக்கு காரணமாகும் என தெரிவித்துள்ளார்.