உலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி மீண்டும் டிரா
‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் 2022ல் நடக்க இருக்கிறது. இதற்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் 106வது இடத்தில் இருக்கும் நம் இந்திய அணி 149வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதல் சுற்றில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு கோல் அடித்து 1 – 0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது. அடுத்த சுற்றி இந்திய அணி ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1 – 1 என்ற நிலையில் சமநிலை அடைந்தது. இதுவரை பங்கேற்ற 4 போட்டியில் இந்தியா 3 ‘டிரா’, 1 தோல்வியுடன் பட்டியலில் 4வது இடத்தில் (3 புள்ளி) உள்ளது.