பகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் !

பகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் !

மதுரையில் தங்களது நண்பனைக் கொன்றவர்களை பழிவாங்குவோம் என்று சொல்வது போல இளைஞர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டம் அனுப்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது இவருக்கும் ஒரு கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டு இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது நடந்து ஒரு ஆண்டு முடியும் நிலையில் இவரது நண்பர்கள் ஒட்டியுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் 'சிந்திய ரத்தம் வீண்போகாது. எதிரியை வீழ்த்துவது உறுதி. பகைக்கு வயது ஒன்று. பலிக்குப் பலி தொடரும்' என எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கும்பலை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த போஸடர் மதுரையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.