நாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர் அரசு மருத்துவமனை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
நாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் அரசு மருத்துவமனை இரண்டாவதுஇடத்தை பிடித்துள்ளது.
தூய்மையில் உறுதியாக இருக்கும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் காயகல்ப விருதுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் நேற்று வழங்கினார். அதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடம் பிடித்தது.
இண்டாவதாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. காயகல்ப விருதை அந்தமருத்துவமனையின்இயக்குனர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். மேலும் ஜிப்மர் மருத்துவமனைக்கு
ஒன்றரை கோடி ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.