15-வது உலக தற்காப்பு கலை போட்டி: முதல் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கம் வென்று சாதனை

15-வது உலக தற்காப்பு கலை போட்டி: முதல் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கம் வென்று சாதனை

15-வது உலக வுசூ (தற்காப்பு கலை போட்டி) சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 'சன்டா' 48 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் 2-1 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீரர் ரஸ்செல் டியாசை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வுசூ வீரர் என்ற சாதனையை பிரவீன்குமார் படைத்தார்.