குத்துச்சண்டை - காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா வீராங்கனை
பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தற்போது ரஷ்யாவில் உள்ள உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 54 கிலோ உடல் எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஜமுனா போரா, அல்ஜீரியா வீராங்கனை ஒயிடாட் போவுடன் மோதினார். முதலில் சற்று தடுமாறிய ஜமுனா போரா, இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் ஜமுனா போரா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.