ஒரு சதம் மூலம் சாதனை பட்டியலில் இணைந்த குவின்டன் டி காக்

ஒரு சதம் மூலம் சாதனை பட்டியலில் இணைந்த குவின்டன் டி காக்

இந்தியா , தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 7 விக்கெட் இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டை இழந்து 385 ரன்கள் குவித்தனர். இதில் அதிகபட்சமாக எல்கர் 160 , குவின்டன் டி காக் 111 ரன்கள் அடித்தார் அதில் 16 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும். இதன் மூலம் இந்தியாவில் டெஸ்ட் போட்டிக்கு சுற்று பயணம் செய்து சதம் அடித்த விக்கெட் கீப்பர் பட்டியலில் குவின்டன் டி காக் இணைந்து உள்ளார். அந்த பட்டியலில் குவின்டன் டி காக் 13 வது இடத்தில் உள்ளார்.