உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு தகுதி

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : அமித் பன்ஹால் அரையிறுதிக்கு தகுதி

ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது இந்த ஆட்டத்தில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால், கார்லோ பாலமை (பிலிப்பைன்ஸ்) எதிர்கொண்டார்.

முதல் ரவுண்டில் ஆக்ரோஷம் காட்டிய கார்லோ , அடுத்தடுத்த ரவுண்டில் வீழ்ச்சியை சந்தித்தார். தொடர்ந்து ஆவேசம் காட்டிய அமித் பன்ஹால் நடுவர்களின் ஒருமித்த தீர்ப்பின்படி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இதனைத்தொடர்ந்து நாளை நடக்கும் அரைஇறுதியில் அமித் பன்ஹால் கஜகஸ்தானை சேர்ந்த சகென் பிபோஸ்சினோவை சந்திக்கிறார். மேலும் அரையிறுதிக்கு முன்னேறிய அமித் பன்ஹாலுக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.