சிங்கப்பூரை சேர்ந்த SingHealth மற்றும் Glosel நடத்திய “கேரிங் ஃபார் யோர் ஹெல்த்” (Caring for Your Health)
சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையிலான மருத்துவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாக, சிங்கப்பூரின் முன்னணி பொது சுகாதார நிறுவனம் SingHealth மற்றும் Glosel நிறுவனங்கள் இணைந்து ‘கேரிங் ஃபார் யோர் ஹெல்த்’ (Caring for Your Health) எனும் சுகாதார விழிப்புணர்வு கலந்தாய்வை நடத்தின. சென்னையில் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்ச்சி, குடும்ப நலம், மகளிர் சுகாதாரம், தடுப்பு சிகிச்சை, மற்றும் சமூக சுகாதார விழிப்புணர்வு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியது.
இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு அரசின் பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மனோத்தங்கராஜ் அவர்கள் மற்றும் சிங்கப்பூர் குடியரசின் தூதர் திரு. எட்கர் பாங் த்ஸீ சியாங் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தொடக்க விழாவை சிறப்பித்தனார். சென்னை முழுவதும் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் பணிபுரியும் குழந்தைகள் நலம், மகப்பேறு நலம், குடும்ப மருத்துவம், உடல்நல மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்ற துறைகளின் 60க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதில் பங்கேற்றனர். பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கலந்துகொண்டதால் விவாதங்கள் ஆழமான மற்றும் பல்துறை பார்வைகளுடன் முன்னெடுக்கப்பட்டன.
தொடக்க உரையில் மாண்புமிகு அமைச்சர் திரு. மனோத்தங்கராஜ் அவர்கள்,
“பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் உள்ளது. இத்தகைய பன்னாட்டு ஒத்துழைப்புகள் நமது சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, மக்கள் நேரத்திலான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை உணர உதவுகின்றன,” என்றார்.
தூதர் திரு. எட்கர் பாங் த்ஸீ சியாங் அவர்கள்,
“சிங்கப்பூர் மற்றும் இந்தியா பல ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் கல்வித் துறைகளில் துறையில் நெருக்கமான உறவை பகிர்ந்து வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் தொழில்முறை அறிவியல்பகிர்வு, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தி இரு சமூகங்களுக்கும் நன்மை பயக்கின்றன,” எனக் குறிப்பிட்டார்.
SingHealth-ஐச் சேர்ந்த மருத்துவர்கள், டாக்டர் ஷெபாலி டாகோர், மூத்த ஆலோசகர், KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, டாக்டர் என். சங் வை (மார்க்), மூத்த
ஆலோசகர், SingHealth Polyclinics, இணை உதவி பேராசிரியர் டாக்டர் சோனாலி பிரஷாந்த் சோன்கர், மூத்த மருத்துவ நிபுணர், KK பெண்கள் மற்றும் குழந்தைகள்.
மருத்துவமனை, ஆகியோர் குடும்ப நலம், மகளிர் சுகாதாரம், கர்ப்பகால பராமரிப்பு, தடுப்பு பரிசோதனைகள் மற்றும் சமூக சுகாதாரத்தை மேம்படுத்தும் குடும்ப மருத்துவர்களின் பங்கு குறித்து எளிமையாகவும் பயனுள்ள தகவல்களுடன் உரையாடினர்.
டாக்டர் ஷெபாலி டாகோர் கூறுகையில், “குடும்பங்களுக்கு சரியான அறிவும் தேவையான அணுகலும் வழங்கப்படுவதே ஆரோக்கியமான சமூகத்திற்கான அடித்தளமாகும். மருத்துவ பராமரிப்பு குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது விழிப்புணர்வும் புரிதலும் தான்”, என்றார்.
டாக்டர் என். சங் வை, “முதன்மை சுகாதாரப் பராமரிப்பில்தான் உண்மையான மாற்றம் தொடங்குகிறது. தடுப்பு, கல்வி மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பு மூலம் சமூகத்தின் நீண்டகால நலனை மேம்படுத்த முடியும்” எனக் கூறினார்.
டாக்டர் சோனாலி பிரஷாந்த், “பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சரியான தகவலும் உறுதுணையும் அவசியம். விழிப்புணர்வு நிகழ்வுகள் அந்த இடைவெளியை அர்த்தமுள்ள முறையில் நிரப்புகின்றன,” என்றார்.
SingHealth-ஐ பிரதிநிதித்துவப்படுத்திய விஜையா ராவ், “சமூக சுகாதார கல்வியை மேம்படுத்தவும் தடுப்பிலிருந்து மேம்பட்ட சிகிச்சை வரை முழு பராமரிப்பையும் அனைவருக்கும் கொண்டு செல்லவும் எங்களது பண்பு சார்ந்த அர்ப்பணிப்பு இந்த முயற்சியில் பிரதிபலிக்கிறது. Glosel உடனான இந்த கூட்டணி சமூக நலத்தில் நீண்டகால தாக்கத்தை உருவாக்கும்,” என தெரிவித்தார்.
சென்னையில் இத்தொடர்பை எளிதாக்கிய ராதா சஞ்சீவ் “உலகத் தரத்தில் உள்ள மருத்துவ அறிவை உள்ளூர் சமூகங்களுக்கு எளிதாக அடையச் செய்வதே எங்கள் நோக்கம். SingHealth உடன் இணைவதன் மூலம் மக்கள் சுகாதாரத் தீர்மானங்களை சரியான தகவலின் அடிப்படையில் எடுக்க உதவுகிறோம்,” என்று தெரிவித்தார்.
நிகழ்வு இறுதியில் வருகை தந்த மருத்துவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கிடையில் திறந்த உரையாடல் நடைபெற்றது. இது அறிவுப் பகிர்வு, சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியது.
SingHealth குறித்து:
SingHealth என்பது சிங்கப்பூரின் மிகப்பெரிய பொது சுகாதார நிறுவனம். நான்கு மருத்துவமனைகள், ஐந்து தேசிய நிபுணத்துவ மையங்கள், எட்டு பொலிகிளினிக்கள் மற்றும் மூன்று சமூக மருத்துவமனைகள் என பல்வேறு நிலைகளில் ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்குகிறது. நோயாளியை மையமாகக் கொண்ட சிகிச்சை, கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகிய துறைகளில் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டுள்ளது. “Patients at the Heart of All We Do” என்ற தத்துவத்தின் கீழ் எதிர்கால சுகாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றுகிறது.
Glosel குறித்து:
1999-ல் நிறுவப்பட்ட Glosel Pharmaceuticals, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட சுகாதார நிறுவனம். மருந்துகள் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் தயாரிப்புகளின் உற்பத்தி, விநியோகம், சோர்சிங் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் உலகத் தரமான சேவைகளை வழங்குகிறது. தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா முழுவதும் செயல்பட்டு சமூக சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் முன்னணி மருத்துவ அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. மருத்துவ முன்னேற்றத்தையும் மக்கள் அணுகலையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே அதன் நோக்கம்.




