டெல்லியில் காற்று மாசு காரணமாக 32 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
புதுடெல்லி:டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுபொருட்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி கட்டுமான பணிகள், பட்டாசு வெடிப்பதன் காரணமாக காற்று மாசு அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
டெல்லியில் நேற்று காலை காற்று மாசும், பனிமூட்டமும் அதிகரித்து இருந்தது. இதனால் டெல்லி விமான நிலையத்துக்கு வந்த 32 விமானங்கள் அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், மும்பை, லக்னோ நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னை, கோவா, பெங்களூரு, ஆமதாபாத்தில் இருந்து டெல்லி வந்த விமானங்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.