சென்னை விமானநிலையத்தில் கீழே கிடந்த 3 கிலோ தங்கம் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்யும் பகுதியான சுங்க சோதனை பகுதியில் ஒரு பை கேட்பாராற்ற நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பையை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.1 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்த தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் யார் அதனை கொண்டுவந்தார் என்பது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.