இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400 கி.மீ. தூரம் பிரமாண்ட 'பசுமை சுவர்'..!

இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க 1400 கி.மீ. தூரம் பிரமாண்ட 'பசுமை சுவர்'..!

குஜராத்தில் இருந்து டில்லி அரவள்ளி மலைகளில் மையத்தில் 1,400 கி.மீ., தூரம் மற்றும் 5 கி.மீ., அகலம் கொண்ட பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்!! குஜராத் முதல் பானிபட் வரை பசுமை சுவர் அமைக்கும் திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், பல அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் போது இது ஒரு மரபு திட்டமாக மாறக்கூடும். குஜராத்தின் போர்பந்தர் முதல் பானிபட் வரை மரக்கன்றுகள் நட்டு, பசுமை கட்டமைப்பு உருவாவதுடன், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி பகுதிகளில், ஆரவல்லி மலை பகுதிகளில், காடுஅழிப்பு மூலம் சீரழிந்த நிலத்தை மீட்க உதவும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் மனித நடவடிக்கைகளால் அழிக்கப்பட்ட காடுகளை மீட்டெடுத்தல், மற்றும் பாலைவனமயமாக்கலை தடுக்க குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் முதல் ஹரியானா மாநிலத்தின் பானிபட் வரை குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி இடையே ஆரவல்லி மலைத் தொடர் வழியாக 1400 கிலோமீட்டர் தூரத்துக்கும் 5 கிலோமீட்டர் அகலத்துக்கும் மரங்களை வளர்த்து பசுமைச் சுவர் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்காவில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல்வேறு காரணங்களால் பிற உலக நாடுகள் அதனை செயல்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. இந்நிலையில் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற பாலைவனமயமாக்கலுக்கு எதிரான பல்வேறு நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பசுமைச் சுவர் தொடர்பான கருத்து முன்வைக்கப்பட்டாலும் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.