நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.முந்தைய அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.95,830 கோடியாக இருந்தது.தொடர்ச்சியாக 2 மாதங்களாக பொருள்கள் மற்றும் சேவைகள் வரி வசூல் குறைந்து வந்த நிலையில் நவம்பர் மாதத்தில் வரி வசூல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதத்தில் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி வசூல் ரூ.1.03 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வசூலுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகமாகும். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.97,637 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது. அந்த வசூலுடன் ஒப்பிடுகையில் கடந்த மாத்தில் 5.29 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது.

கடந்த நவம்பர் 30ம் தேதி வரை, சுமார் 77.80 லட்சம் கணக்குகளில் ஜிஎஸ்டிஆர் 3பி விற்பனை வரித் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது. முந்தைய அக்டோபர் மாதத்தில் 73.30 லட்சம் கணக்குகளில் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கணக்கீட்டு நவம்பர் மாதத்தின் மொத்த வரி வசூலான ரூ.95,380 கோடியில், மத்திய ஜிஎஸ்டியில் ரூ.17,582 கோடியும், மாநில ஜிஎஸ்டியில் ரூ.23,674 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.46,517 கோடியும் (ரூ.21,446 கோடி இறக்குமதி வரி வருவாய் உட்பட) வருவாய் கிடைத்துள்ளது. மேலும் சிறப்பு செஸ் வரிகள் வாயிலாக ரூ.7,727 கோடியும் (ரூ.869 கோடி இறக்குமதி வரி வருவாய் உட்பட) வருவாய் கிடைத்துள்ளது.

முந்தைய அக்டோபர் மாதத்தின் மொத்த வரி வசூலான ரூ.1,03,492 கோடியில், மத்திய ஜிஎஸ்டியில் ரூ.19,592 கோடியும், மாநில ஜிஎஸ்டியில் ரூ.27,144 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.49,028 கோடியும் (ரூ.210,948 கோடி இறக்குமதி வரி வருவாய் உட்பட) வருவாய் கிடைத்தது. மேலும் சிறப்பு செஸ் வரிகள் வாயிலாக ரூ.7,607 கோடியும் (ரூ.774 கோடி இறக்குமதி வரி வருவாய் உட்பட) வருவாய் கிடைத்தது.

கடந்த நவம்பர் மாதத்தில் கழிவுகளுக்குப் பின்பு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகுப்பிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.25.150 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.17.431 கோடியும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற கொள்முதல் மற்றும் விற்பனை செயல்பாடுகளின் அடிப்படையிலும் நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வரித் தாக்கலின் அடிப்படையிலும், வழக்கமான மற்றும் தற்காலிக முன்கூட்டிய நிதியளிப்புகளுக்குப் பின்பு மத்திய ஜிஎஸ்டி தொகுப்பில் ரூ.44,742 கோடியும், மாநில ஜிஎஸ்டி தொகுப்பில் ரூ.44,576 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

முந்தைய அக்டோபர் மாதத்தில் ரூ.95,380 கோடியும், செப்டம்பரில் ரூ.91,916 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.98,202 கோடியும் ஜிஎஸ்டி வசூல் கிடைத்தது.

ஜூலை, 2017ல் ஜிஎஸ்டி வரித்தாக்கல் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு 8வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. மேலும் நவம்பர் மாத வசூல் மூன்றாவது அதிகபட்ச வசூலாகும். முன்னதாக ஏப்ரல் மற்றும் மார்ச் மாதங்களில் அதிகபட்ச வசூல் கிடைத்தது. மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1.13 லட்சம் கோடியும், ஏப்ரல் மாதத்தில் ரூ.1.06 லட்சம் கோடியும் வசூல் கிடைத்தது.