உற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும் தொழிலார்கள்!!
இந்திய பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவி வருவாதல், கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்து வருகிறது. அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனையடுத்து பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது, மேலும் தாற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியும் வருகின்றன.
அந்த வகையில் தற்போது அசோக் லேலண்ட் நிறுவனம் தனது 5 தொழிற்சாலைகளில் மொத்தமாக 59 வேலைநாட்களை விடுமுறையாக அறிவித்துள்ளது. எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் இந்த மாதம் 16 நாட்களும், ஓசூர் தொழிற்சாலையில் 5 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கபப்ட்டுள்ளது.
அதேபோலவே, ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் தொழிற்சாலை, மஹாராஷ்டிராவின் பந்த்ரா தொழிற்சாலைகளில் 10 நாட்களும், பந்த் நகரில் 18 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ள அந்த நிறுவனம், போதுமான அளவு வாகன விற்பனை நடைபெறாததால் வேறு வழியின்றி இந்த முடிவை நாங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் தொழிலார்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.