விவேகம் - திரை விமர்சனம்

விவேகம் - திரை விமர்சனம்
Vivegam Movie Review

இயக்குனர்- சிவா

நடிகர்- அஜித்குமார், விவேக் ஓபராய்

நடிகை- காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன்

இசை- அனிருத் ரவிச்சந்தர்

புளூட்டோனிய அணு ஆயுதங்களை பூமிக்கடியில் புதைத்து, செயற்கையாக நிலநடுக்கத்தை ஏற்படுத்தி, பல நாடுகளின் பொருளாதாரத்தைக் சீர்-குலைக்கத் திட்டமிடுகிறது சர்வதேச அளவிலான "சீக்ரெட் சொஸைட்டி". அக்குழுவின் முக்கிய நபர், இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தத் திட்டமிடுகிறார். அதை கண்டுபிடித்து செயல் இழக்க வைப்பதற்காக, அஜித் தலைமையில் தொழில் முறை நண்பர்கள் விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சௌத்ரி ஆகிய நான்கு பேரும் இணைந்து செயல்படுகிறார்கள்.

பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட அணு ஆயுதங்களுக்கும், அக்‌ஷராஹாசனுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அக்‌ஷராவை கண்டுபிடித்தால் தான் புதைக்கப்பட்ட அணு ஆயுதங்களை அழிக்க முடியும் என்ற நிலையில் அவரை அஜித்தின் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அக்‌ஷராவை அஜித் கண்டுபிடித்த நிலையில், அவரை கொன்று விடும்படி உத்தரவு வர-அதற்கு அஜித் மறுத்து, அக்‌ஷராவை காப்பாற்ற முயற்சிக்கிறார். அவருடைய பாதுகாப்பையும் மீறி, அக்‌ஷரா கொள்ளப்படுகிறார்.

இந்த நிலையில், விவேக் ஓபராய் உள்பட நண்பர்கள் மூன்று பேரும் அஜித்துக்கு துரோகிகளாக மாறுகிறார்கள். அஜித்தை சர்வதேச தீவிரவாதி என்ற முத்திரை குத்தி, அவரை கொல்லவும் முயற்சிக்கிறார்கள். துரோகிகளான நண்பர்களிடம் இருந்து அஜித் தப்பினாரா, அணு ஆயுதங்களை கைப்பற்றி செயல் இழக்க செய்தாரா? என்பது தான் கதை.

ஆக்சன் காட்சிகளுக்காக அஜித்குமார் தீவிரமாக உழைத்துள்ளார், படத்தின் சண்டைகாட்சிகள் அசர வைக்கிறது, செர்பியக் காடுகளில் அஜித் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் அபாரம். விவேக் ஓபராய் கம்பீரமான வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். அக்‌ஷராஹாசன் தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அஜித்தின் மனைவியாக வரும் காஜல் அகர்வாலுக்கு இப்படத்தில் நடிக்கவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மொத்தத்தில் விவேகம்- அதி வேகம்.

Vivegam Movie Review