விரைவில் வெளியாகிறது விஜய்சேதுபதி - திரிஷா நடிக்கும் “ 96 “

விரைவில் வெளியாகிறது விஜய்சேதுபதி - திரிஷா நடிக்கும் “ 96 “
Vijay Sethupathy and Trisha starring 96 Releasing Soon

விரைவில் வெளியாகிறது விஜய்சேதுபதி - திரிஷா நடிக்கும் “ 96 “

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற "ரோமியோ ஜூலியட்", விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் “ 96 “ என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார், மற்றும் ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம்

இசை - கோவிந்த் மேனன்

எடிட்டிங் - கோவிந்தராஜ்

கலை - வினோத் ராஜ்குமார்

பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா.

எழுத்து, இயக்கம் - C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

தயாரிப்பு - எஸ்.நந்தகோபால்

படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்ல என்றார் இயக்குனர் C.பிரேம்குமார்.

படத்தை உலகம் முழுவதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் S.S.லலித்குமார் வெளியிடுகிறார்.

Vijay Sethupathy and Trisha starring 96 Releasing Soon