நடிகர் கேப்டன் ராஜு கேரளாவில் மரணம் நடிகர் சங்கம் இரங்கல் !

நடிகர் கேப்டன் ராஜு கேரளாவில் மரணம் நடிகர் சங்கம் இரங்கல் !
Veteran actor Captain Raju passed away Nadigar Sangam Condolence message
நடிகர் கேப்டன் ராஜு கேரளாவில் மரணம் நடிகர் சங்கம் இரங்கல் !
நடிகர் கேப்டன் ராஜு கேரளாவில் மரணம் நடிகர் சங்கம் இரங்கல் !

பிரபல வில்லன் - குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு(68) உடல்நல குறைவின்றி இன்று அதிகாலையில் கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

"நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர், பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ராணுவ அதிகாரியாக பணியாற்றும் வேளையிலேயே கலை ஆர்வத்தால் நண்பர்களுடன் சேர்ந்து மும்பையில் நாடகக்குழு அமைத்து நாடகங்களில் நடித்து வந்தார். 1980- ல் 'ரத்தம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரைப்பட நடிகரானார். கடந்த 37 ஆண்டுகளில் ஐநூறுக்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். விக்ரம் கதாநாயகனாக நடித்த 'இதா ஒரு சினேக கதா ' என்ற மலையாள படத்தை இயக்கி இயக்குனராகவும் தனி முத்திரை பதித்தார். மேலும் அணைத்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார் படங்களிலும் வில்லனாக நடித்தும் புகழ் பெற்றவர். தர்மத்தின் தலைவன், சூரசம்ஹாரம் , ஜீவா, என் ஜீவன் பாடுது, ராஜகுமாரன் ஆகியவை தமிழில் அவரது முக்கிய படங்களாகும். என்றும் நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவரது இழப்பு தென்னிந்திய திரைத்துறைக்கு ஈடு கட்ட முடியாத /இயலாத மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது உற்றார் உறவினர்கள் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் "

நன்றி

தென்னிந்திய நடிகர் சங்கம்

Veteran actor Captain Raju passed away Nadigar Sangam Condolence message