"யூ டர்ன்" - விமர்சனம்

"யூ டர்ன்" - விமர்சனம்

வேளச்சேரி மேம்பாலத்தில் அடுத்து அடுத்து பத்துபேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதன் பின்னணியில் யூடர்ன் கதை பின்னப்பட்டிருக்கிறது.

கன்னடத்தில் வெற்றியடைந்த படத்தை தமிழில் "யூ டர்ன்", பண்ணியிருக்கிறார்கள். சமந்தா ஆங்கில பத்திரிகையாளராக நடித்து பத்து பேரும் எப்படி இறக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் வேலையை செய்கிறார். மிகவும் திரில்லான கதை என்பதால் சமந்தா அதற்கு ஈடுசெய்யும் வகையில் பயம், திகில் கலந்த நடிப்பை வெளிபடுத்துகிறார். சமந்தாவுக்கு ஜோடியாக ராகுல் ரவிந்திரன் நடித்திருக்கிறார்.

மிகவும் குழப்பமான வழக்கை விசாரிக்கும் போலிஸ் ஆபிசராக ஆதி பேர் சொல்லும் விதமாக நடித்து இருக்கிறார். நிக்கத் பொம்மிசெட்டியின் ஒளிப்பதிவில் வேளச்சேரி மேம்பாலம் இரவுக்காட்சிகள் பிரமாதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் பாடல்கள் இல்லை என்றாலும் பூர்ண சந்திர தேஜஸ்வியின் பின்னணி இசை பின்னி எடுக்கிறது.

திரைக்கதை வேகமாக பின்னப்பட்டிருப்பதால், படம் தொய்வில்லாமல் செல்கிறது.

மொத்தத்தில், நம் வாழ்கையில் நடக்கும் சின்ன சின்ன தவறுகள் கூட பிறருடைய வாழ்க்கையை எப்படி கெடுக்கும் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் பவன்குமார்.