நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்
Transgenders protest against actress Kasthuri in her house

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் வழங்கினர்.

அதாவது, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தரும் உத்தரவிட்டனர்.

இதனால் வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், "நீதிமன்றத்தில் இருவேறு தீர்ப்புகள். அப்போ 18 ஐ பிரித்து ஆளுக்கு ஒன்பது எம்.எல்.ஏக்களா? ஆ ஆங்! என்று பதிவிட்டுள்ளார்.

சொந்த அரசியல் ஆதாயத்திற்காக திருநங்கைகளை அவதூறாக டிவிட்டரில் பதிவிட்டு நடிகை கஸ்தூரி இழிவுபடுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தங்களை இழிவுபடுத்தும் வகையில் ட்விட்டரில் இட்டுள்ள பதிவை நடிகை கஸ்தூரி உடனடியாக நீக்குவதுடன், பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கையர் தெரிவித்தனர்.

Transgenders protest against actress Kasthuri in her house