"யங் மங் சங்", "2"

 "யங் மங் சங்", "2"

இப்படி ஒரு படத்தின் பெயர் வைத்து தயாராகி வருகிறது, இதற்கு முன் part II படங்களின் பெயர்கள் அடங்கிய செய்தியை சென்னை பத்ரிக்கா வெளியிட்டு இருந்தது. இப்பொழுது தயாராகி வெளிவரும் படங்களின் நிலை பற்றிய கட்டுரை இது.

இரும்புத்திரை, உயர்ந்த மனிதன் போல பல பழைய படங்கள் பெயர்களில் வெளிவரும் நிலை உள்ளது. விஜய் சேதுபதி நடித்த படம் 96 என்றும், ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு "2.0", என்றும், எட்டு தோட்டாக்கள் என்றும் எண்ணிக்கையில் பெயர் வைக்கும் நிலையும் உள்ளது. 

இதெல்லாம் இல்லாமல் உப்பு, புலி, காரம்னு சாப்பிடுற ஐயிட்டம் எல்லாம் பெயர் வைக்கும் நிலையும் உள்ளது.

இதுபோக யூடர்ன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ்னு ஆங்கில தலைப்புகளில் படம் வெளிவரும் நிலையம் உள்ளது, அதே போல் "நோட்டா", அதாவது யாருக்கும் ஓட்டளிக்கவில்லை என்று குறிக்கும் சொல்லில் பெயர் வைக்கும் நிலையம் உள்ளது, இதனால் கதைக்கேற்ப பெயர் கிடைக்காததால், படம் ஷூட்டிங் ஆரம்பித்து பின் காலம் கடந்து பெயர் வைக்கும் நிலையம் உள்ளது, இதற்கு காரணம் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் பல பெயர்களை கவுன்சிலும், சேம்பரிலும் கில்டியும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள், அதனால் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பெயர் வைக்காமல் திணறும் நிலையம் ஏற்படுகிறது. இதனால் கதைக்கேற்ற பெயர் வைத்திருக்கும் நிறுவனத்திற்கு பணம் கொடுத்து வாங்கும் நிலையம் ஏற்படுகிறது.

இப்பொழுது வெளியாக இருக்கும் படங்களை பார்போம் யாகன், அமாவாசை, அடங்க மறு, "நட்புன்னா என்னனு தெரியமா", எழுமின், திமிரு புடிச்சவன், கூத்தன், மரகதக்காடு, சித்திரமே சொல்லடி, கரிமுகன், அடங்காப் பசங்க, கலைவாணி சிறுக்கி, ஓளடதம், வடசென்னை, போதுமா இன்னும் பெயர் வேண்டுமா?