சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது "வரலாற்றில் இன்று" நிகழ்ச்சி

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது "வரலாற்றில் இன்று" நிகழ்ச்சி

மனித இனம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது தான் வரலாறு. அப்பேற்பட்ட வரலாற்று பக்கங்கள் தினம் தினம் பல்வேறு நிகழ்வுகளால் செதுக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியிலும் பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கிறது. சம்பவங்கள் நிறைந்த இந்த சரித்திர பாதையில் தான் மனித இனம் பயணித்து கொண்டிருக்கிறது. அப்பேற்பட்ட வரலாற்றை, தொலைத்த  தினமாக மாறாமல் பல்வேறு நிகழ்வுகளை நினைவுபடுத்தி கொண்டே தான் இருக்கிறோம். தொலைந்து போன வரலாற்றையும் தேடி கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி தான் " வரலாற்றில் இன்று". தயாரிப்பாளர் S.G.பரத்  தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி தினம்தோறும் காலை 7:30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.