சாமி ஸ்கொயர் - சினிமா விமர்சனம்

சாமி ஸ்கொயர் - சினிமா விமர்சனம்
Saamy Square Tamil Movie Review
சாமி ஸ்கொயர் - சினிமா விமர்சனம்
சாமி ஸ்கொயர் - சினிமா விமர்சனம்
சாமி ஸ்கொயர் - சினிமா விமர்சனம்

2003-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற "சாமி" திரைப்படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ளது "சாமி ஸ்கொயர்", சாமி படத்தில் திருநெல்வேலியை கலக்கிவந்த பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை, விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை போலிஸுக்கு பயந்து தலைமறைவு என்று தான் முடிவு இருக்கும். அதன் தொடர்ச்சியாக இப்படம் வந்துள்ளது.

திருநெல்வேலியின் ரவுடிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் சொந்த ஊரான பழனியில் வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் இலங்கையில் வாழ்ந்து வரும் பெருமாள் பிச்சையின் மகன்கள் ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா, திருநெல்வேலிக்கு விரைந்து, ஆறு சாமியை கொல்ல முடிவு செய்கிறார்கள், அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

அதேநேரத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மகனை பெற்றெடுத்து விட்டு இறந்துவிடுகிறார். ராமசாமி என்னும் பெயரில் வளரும் அந்த குழந்தையை ஆறுச்சாமியின் மாமானாரான டெல்லி கணேஷ் டெல்லிக்கு எடுத்து சென்று வளர்கிறார்.

இதையடுத்து, ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெறும் ராமசாமி, திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் இதற்கு டெல்லி கணேஷ் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார், கடைசியில் ராமசாமி திருநெல்வேலிக்கு சென்றாரா? தன்னுடைய தந்தையை கொன்றவர்களை பழிவாங்கினாரா? என்பது தான் கதை.

அப்பா, மகன் என இரு கதாபாத்திரத்தில் விக்ரம் கச்சிதமாக நடித்துள்ளார், வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ் தனுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். பாபி சிம்ஹா மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.

ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி.

மொத்தத்தில், சாமி ஸ்கொயர் - ரசிகர்களுக்கு விருந்து.

Saamy Square Tamil Movie Review