அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’

அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’

நேற்று (15.11.2018) ‘காற்றின் மொழி’ திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. ஜோதிகா, விதார்த், ராதாமோகன், தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிகையாளர்களுடன் இப்படத்தைக் கண்டு களித்தனர்.

படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படக்குழுவினருக்குப் பாராட்டைத் தெரிவித்தனர். இப்படம் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. நல்ல கருத்தைக் கொடுக்கும் படமாகவும், அந்தக் கருத்தை நகைச்சுவையோடு கலந்து கொடுக்கும் படமாகவும் இருந்ததாக கூறினர். நகைச்சுவைக் காட்சிகளை ரசித்து மகிழ்ந்தனர்.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி வெள்ளத்தின் திளைத்தனர்.

ராதாமோகன் இயக்கியிருக்கும் இப்படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜி.தனஞ்செயன், விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, AH காஷிப் இசையமைத்துள்ளார்.