நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகின்றது ‘சினிமேக்ஸ்’நிகழ்ச்சி

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகின்றது ‘சினிமேக்ஸ்’நிகழ்ச்சி
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகின்றது ‘சினிமேக்ஸ்’நிகழ்ச்சி

சினிமா சார்ந்த பல விஷயங்களை பல்வேறு பகுதிகளில் உள்ளடக்கி ‘சினிமேக்ஸ்’ என்னும் நிகழ்ச்சி ஓவ்வொருவாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மாலை 5.30 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகின்றது.

இந்நிகழ்ச்சியில், வாரம் முழுக்க  நடைப்பெற்ற கோலிவுட் விஷயங்களைச் சொல்லும் “டாப் 7”, தமிழ் சினிமா அல்லாத மற்ற மொழி சினிமா உலக விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லும் “BTM”, அந்தந்த வாரங்களில் வெளியாகும் திரைப்படங்களை நேர்மையாக விமர்சனம் செய்யும்  “சினிமா ஃபோகஸ்” (cinema focus)கோலிவிட்டில் நடைப்பெற்ற முக்கியமான இசை வெளியீட்டு விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்பு போன்றவற்றை உங்கள் கண் முன் கொண்டு வரும் “போஸ்டர்”, சினிமாவில், சமூக வலைதளங்களில் பலராலும் பேசப்படும் ஓர் விஷயத்தை நக்கல் நய்யாண்டியோடு கலந்து பேசும் “OK TAKE”, நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பட குழுவினரின் கலகலப்பான சிறப்பு நேர்காணல்கள் என பல்வேறு பகுதிகள் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சியினை தொகுப்பாளினிகள் ஐஸ்வர்யா, நிவேதிதா மற்றும் ஸ்ரீலேகா தொகுத்து வழங்குகின்றனர்.