"நாடோடிகள் 2 " எப்போது வெளிவரவுள்ளது

"நாடோடிகள் 2 " எப்போது வெளிவரவுள்ளது

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 " உருவாகி வருகிறது.  இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

இசை - ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு - ஏகாம்பரம்

கலை - ஜாக்கி

எடிட்டிங் -  ரமேஷ்

பாடலாசிரியர் – யுகபாரதி

சண்டை பயிற்சி -  திலீப் சுப்புராயன்

நடனம் - திணேஷ், ஜான் 

தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன்.

தயாரிப்பு  -  எஸ்.நந்தகோபால்

எழுதி இயக்குகிறார்  - சமுத்திரகனி.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.