மாஸ்டர் படத்தில் "ஒரு குட்டி கதை " எனும் பாடலை பாடிய தளபதி விஜய் !

மாஸ்டர் படத்தில் "ஒரு குட்டி கதை " எனும் பாடலை பாடிய தளபதி விஜய் !

மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய  படத்தொகுப்பினை பிலோமின் ராஜ்  கவனிக்கிறார்  .

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் ,அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன், கௌரி கிஷான்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள் .

அனிரூத் இசையில் தளபதி விஜய் குரலில் " ஒரு குட்டி கதை " என தொடங்கும் முதல் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது .

இதற்கு முன்பு கத்தி படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை தளபதி விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் 2020  ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர் .

தொழிநுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு : சேவியர் பிரிட்டோ ( XB பிலிம் கிரியேட்டர்ஸ்)
இசை - அனிரூத்
வசனம் - லோகேஷ் கனகராஜ் ,ரத்ன குமார் , பொன் பார்த்திபன்  
ஒளிப்பதிவு - சத்யன் சூரியன்
படத்தொகுப்பு - பிலோமின் ராஜ்
லைன் புரொடியூசர்ஸ்-  லலித் - ஜெகதீஷ் ,
நிர்வாக தயாரிப்பு - R .உதயகுமார்
சண்டை பயிற்சி - ஸ்டண்ட் சில்வா
விளம்பர வடிவமைப்பு - கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பு - பல்லவி சிங்
நடனம் - தினேஷ் , சதிஷ்
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்