இந்திரஜித்- சினிமா விமர்சனம்

இந்திரஜித்- சினிமா விமர்சனம்

இந்திரஜித்....படத்தின் கதை என்ன?

1400 ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து வெடித்துக் கிளம்பிய ஒரு விண் துகள் பூமியை நோக்கி வந்தது. அது வழியில் பிரபஞ்சத்தில் தானாக சுற்றிக் கொண்டிருந்த ஒரு கல்லுடன் மோதி, அதனுடன் இயைந்து மேலும் வலுவாகி பூமியில் வந்து விழுகிறது.

அந்தக் கல் பூமியில் வந்து விழுந்தவுடன் அந்தக் கல்லின் தன்மை அந்த மண்ணில் பரவுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியே செழித்து வளர்கிறது. தாவரங்களுக்கு, மட்டுமில்லாது சாதாரண உயிர்களுக்கும் அந்தக் கல்லின் சக்தி பரவி அவைகளும் பலம் பெறுகின்றன. மனிதனுக்கு ஏற்படும், காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது. மேலும் அந்த விண் கல் மனிதனுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்து, காயங்களை குணப்படுத்தும் குணத்தையும் கொண்டது என்றும், இது அருகாமையில் இருந்தால் நானூறு ஆண்டுகளுக்கு எந்த நோய், நொடியும் மனிதர்களை அண்டாது என்று நமது ஆதி கால சித்தர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் எழுதி வைத்திருக்கும் ஓலைச் சுவடிகளை 1900-களில் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த தீட்சிதர் ஒருவர் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். இவர் கோவாவில் இருக்கும் சச்சின் கேதகருக்கு நெருங்கிய உறவினர். சச்சின் கேதகர் தொல்லியல் துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு ஒரு முறை தீட்சிதரின் வீட்டுக்கு வந்தவர், அங்கேயிருந்த அந்த பழைய ஓலைச் சுவடிகளை படித்துப் பார்த்து அந்த விண் கல் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்கிறார். அந்த விண் கல்லைத் தேடி கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று திட்டமிடுகிறார் பேராசிரியர். இதற்காக தன்னுடன் சில மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு அந்த விண் கல்லைத் தேடத் துவங்குகிறார்.

பேராசிரியர் சச்சினின் இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்து வருகிறார் பக்கத்து வீட்டுக்காரரான நாகபாபு. தன்னுடைய அக்காள் மகனான கவுதம் கார்த்திக்கை சென்னையில் இருந்து கோவாவுக்கு வரவழைத்து, அவரையும் இந்தக் குழுவுடன் சேர்த்துவிடுகிறார் நாகபாபு.

தேசிய தொல்லியல் துறையின் இயக்குநராக தற்போது பதவிக்கு வந்திருக்கும் சுதன்ஷூ பாண்டேவுக்கு, சச்சினின் இந்தத் தேடுதல் வேட்டை பற்றி அரசல் புரசலாகத் தெரிய வருகிறது. சுதன்ஷூ, சச்சினின் வீட்டுக்கே வந்து விண் கல்லின் தேடுதல் வேட்டை பற்றித் தெரிந்து கொள்கிறார்.

இது பற்றி தனது அலுவலகம் மூலமாக காவல் துறையில் புகார் கொடுத்து சச்சினை விசாரணைக்குள்ளாக்குகிறார் சுதன்ஷூ. இதனால் பயந்து போகும் சச்சின் தனது மாணவர்களிடத்தில் சொல்லி இடத்தை மாற்றுகிறார்.

இந்த நேரத்தில்தான் கவுதம் கார்த்திக்கு முழு விஷயமும் தெரிய வர.. “அந்தத் தீட்சிதரின் சமாதியைத் தோண்டினால் என்ன?” என்கிறார். அதேபோல் சமாதியைத் தோண்ட.. அங்கே விண் கல் இருக்குமிடத்தின் வரைபடம் கிடைக்கிறது.

இந்த வரைபடத்துடன் அது இருக்கும் இடம் நோக்கி சச்சின் டீம் பறக்கிறது. சச்சினின் டீமிலேயே ஒருவனை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் சுதன்ஷூ, ரகசியமாக அவன் சொல்லும் துப்புக்களின்படி தன் குழுவினருடன் இவர்களைப் பின் தொடர்கிறார்.

கடைசியாக அந்த விண் கல்லைக் கண்டெடுத்தார்களா… இல்லையா… என்பதுதான் படத்தின் திரைக்கதை.....நடிப்பில் கவுதம் கார்த்திக் குறையே வைக்கவில்லை.தனக்கெரிய உரிய துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். படத்தில் சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுடன் ரொமன்ஸ் செய்யும் வாய்ப்பு குறைவாக உள்ளது. சொனாரிகா முதல் சில காட்சிகளிலும், அஷ்ரிதா ஷெட்டி கவுதம் கார்த்திக் குழுவினருக்கு உதவி செய்யும் பெண்ணாக வருகிறார்.

தயாரிப்பாளர் தாணுவின் மகனான இயக்குநர் கலா பிரபு இதற்கு முன்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சக்கரக் கட்டி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இது இவரது இரண்டாவது படமாகும். புதையல் தேடும் கதையை அறிவியல் ரீதியாக மாற்றி பேன்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கலா பிரபு. கிராபிக்ஸ், VFX காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது.

சச்சின் கேதகரும், சுதன்ஷூ பாண்டேவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடித்திருக்கிறார்கள். சுதன்ஷூ அறிமுகமான முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அழகான வில்லனாகவே வலம் வருகிறார். புரொபஸர் சச்சினோ தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு சுயநலவாதியாக வருவதும், அதைக் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் குறிப்பிடுவதும் எதிர்பாராத டிவிஸ்ட்..

காட்டுக்குள் நடக்கும் ஜீப் சேசிங் காட்சிகளையும், அடர்ந்த காட்டின் அழகையும், அருணாச்சல பிரதேசத்தின் காடுகளின் அழகையும், இயற்கை எழில் கொஞ்சும் அந்த பிராந்தியத்தையும் ஏரியல் வியூவையும், கோவா கடற்கரையின் அழகையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இராசாமதி.

அறிமுக இசையமைப்பாளர் கிருஷ்ண பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். முற்காலத்திய கதை சொல்லும் பின்னணியில்