"எழுமின்" - திரைப்பட விமர்சனம்

"எழுமின்" - திரைப்பட விமர்சனம்

குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் அவசியம் என நினைக்ககூடாது, தற்காப்பு கலையும் அவசியம். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குழைந்தைகள் மட்டுமல்லாமல் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள படம் தான் "எழுமின்".

இப்படத்தில் விவேக், தேவயானி தம்பதிகளுக்கு ஒரே மகன் அர்ஜுன் (சுகேஷ்), இவர் குத்துசண்டை வல்லவனாக நடிக்கிறார், இவருடைய ஏழை நண்பர்களாக பிரவீன், வினீத், ஸ்ரீஜித், கிருத்திகா, தீபிகா ஆகியோரும் தற்காப்பு கலையில் சிறந்து விளங்குகிறார்கள். இருந்தாலும் இவர்களுக்கு தொடர்ந்து கற்க முடியவில்லை, அப்போது  பணக்கார  தொழிலதிபராக இருக்கும்  விவேக் அவர்கள் தொடர்ந்து  கற்க
சொந்த செலவு செய்கிறார், இதற்கு தடையாக இருக்கும் கதாபாத்திரத்தில் அழகம் பெருமாள் நடித்திருக்கிறார்.

படத்தில் தற்காப்பு கலை மாணவர்களுக்கு எப்படி உதவுகிறது என்பதை விரிவாக படமாக்கியிருக்கிறார்கள் இயக்குனர் விஜி.

வழக்கமாக விவேக் என்றாலே நகைச்சுவை என்பதை மாற்றி உணர்ச்சிகரமான காட்சிகளிலும் நடிக்க முடியும் என்பதை நிருபித்து இருக்கிறார்.

கணேஷின் இசை, ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஏற்றிருக்கும் பணி படத்திற்கு பலம்.

இன்றைய சூழ்நிலைக்கு குழந்தைகளுக்கு தேவையான அவசியமான படமாக "எழுமின்", வெளிவந்தது பாராட்டுக்குரியது.