"சர்கார்" திரைப்படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்

"சர்கார்" திரைப்படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்

நடிகர் விஜய் நடித்து தீபாவளி திருநாளன்று வெளிவந்த திரைப்படம் "சர்கார்", சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். 

இந்த நிலையில் சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது, முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி எனும் பெயர் படத்தின் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமிக்கு வைக்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வினர் கோபம் அடைந்தனர், இதனால் சர்கார் திரைப்படம் வெளிவந்துள்ள திரையரங்குகளில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடந்தது, சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும் காட்சியையும், தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் காட்சியையும் மறு தணிக்கையில் தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர்.