செக்க சிவந்த வனம் - சிறப்பு விமர்சனம்

செக்க சிவந்த வனம் - சிறப்பு விமர்சனம்

சென்னையை கலக்கும் தாதாவாக நடித்திருப்பவர் பிரகாஷ் ராஜ்', கில்லியை போல் நூறு கில்லிகளை அள்ளி மிரட்டியிருக்கிறார்.

இன்னொரு தாதாவாக நடித்திருப்பவர் தியாகராஜன், பிரகாஷ் ராஜ் காரில் போகும்போது வெடிகுண்டு வெடித்தும் உயிரிழக்காமல் பிழைக்கிறார், இருந்தாலும் ஒரு சூழ்நிலையில் நெஞ்சுவலி வந்து உயிரிழக்கிறார்.

இதனால் இவருடைய மகன்களாக நடிக்கும் அர்விந்த சாமி, அருண் விஜய், சிம்பு ஆகிய மூவரும் தாதா வர விரும்புகிறார்கள், இதில் யார் பிரகாஷ் ராஜின் இடத்தை பிடிக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

அரவிந்த சாமியின் மனைவியாக ஜோதிகாவும், அருண் விஜய்யின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்புவின் மனைவியாக டயானா ஏரப்பாவும் அவரவர் கதாபாத்திரத்திற்கேற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த சாமியும் அவரது நண்பனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதியும் மிரட்டியிருக்கிறார்கள், ஏ.ஆர் ரகுமான் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

தாதாவின் கதை என்பதால் மணிரத்தினத்தின் தனி திறமையால் திரைக்கதை அமைத்து படமாக்கியிருப்பது பாராட்டுக்குறியது.