பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம்

பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம்

பணம் செல்லாமைக்குப் பின் ., சினிமா நாசம் , விவசாயம் நாசம் , எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் " மேக் இன் இண்டியா" திட்டமா ? " படித்தவுடன் கிழித்து விடவும் " ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!

"தெரு நாய்கள் " படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய "ஐ கிரியேஷன்ஸ்" படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது "படித்தவுடன் கிழித்து விடவும் ".

"தெரு நாய்கள் " படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள "படித்தவுடன் கிழித்து விடவும் " படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, சாலி கிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் திரையுலக வி.ஐ.பிகள் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடந்தது .

விழாவில் பேசிய புரடியூசர் கில்டு அமைப்பின் தலைவர் ஜாகுவார் தங்கம் ., " தமிழ் சினிமாவில் தமிழன் , தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும், இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் அதற்கு தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை... என்று பதில் வருகிறது. 'அழகான தமிழ் பெண்களை நான் தரவா ? '"தமிழர்கள் தான் லைட் பாய் முதல் டைரக்டர் வரை ... அனைத்து தொழில்நுட்பங்களிலும் பணிபுரிய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழன் தான் ஆள வேண்டும் .... வாழ வேண்டும் என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்த நடிகர் மன்சூரலிகான்., இங்கு பேசிய ஜாகுவார் தங்கம் அவர்கள் ., தமிழ் , தமிழன் என்றார். கலைக்கு ஜாதி ,மதம் ,மொழி கிடையாது .... என்பதால் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றும் முயற்சிக்குக் கூட நான் எதிரானவன். எம் .ஜி.ஆ,ர் என்.டி .ஆர் , வி கேஆர் மண்வெட்டி பிடித்து எல்லாம் வளர்த்து எடுத்த சங்கம் அது. எனவே குறுகிய மனப்பாண்மை கூடாது .... என்பது என் கருத்து . மேலும், ஜாகுவார்., இங்கு பேசும் போது ., "தமிழ் சினிமாவில் தமிழன் , தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும், இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதற்கு, தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை... என்று பதில் வருகிறது. 'அழகான தமிழ் பெண்களை நான் தரவா ? '" எனக் கேட்டார். "அப்போ அமலா பால் . ஹன்சிகா மோத்வானி .... எல்லாம் வேண்டாமா ? இதற்காக தொழிலை மாத்தி பேரைக் கெடுத்துக்காதீங்க... ஜாகுவார் .... என்பதே என் அட்வைஸ்! .என கிண்டலாக பேசிய மன்சூரலிகான் ., அடுத்து, அதிரடிக்கு தாவினார்.

பொதுவா ,நான் எந்த சினிமா விழாவுக்கு போனாலும் , அந்தப் படத்தை ஆஹா , ஒஹோ அற்புதம் அப்படின்னு சும்மாங்காட்டியும் பாராட்டி பேச மாட்டேன் .ஆனால், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ", "வளர்ந்தவுடன் சினதத்து விடவும் ", "சாப்பிட்டவுடன் போய் விடவும் " அப்படிங்கற மாதிரி ., "படித்தவுடன் கிழித்து விடவும் " எனும் இப்பட டைட்டிலே ., இப்படக் குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது.

இப்படித்தான் , "ராஜாதி ராஜ, ராஜமார்த்தாண்ட ராஜகு லோத்துங்க ......" என என் படத்திற்கு வித்தியாசமாக மிகப் பெரிய நீளமான டைட்டில் வைத்திருந்த போது , "தெற்கு தெருமச்சான் " ஷூட்டிங் ஸ்பாட்டில் அதைப் பற்றி என்னிடம் பேசிய நடிகர் சத்யராஜும் , இயக்குனர் மணிவண்ணனும் இது என்னய்யா டைட்டில் ? போய்யா ... என்றனர். ஆனால், அதன் பிறகு ஒரு நாள் சத்யராஜ் என்னிடம் ., ஒரு பங்ஷன்ல என் பேமிலியும் , ரஜினி சார் பேமிலியும் கலந்து கொண்டோம் .... அப்போ , என் பசங்களும், ரஜினி சார் பசங்களும் ., உங்க படபேர வச்சு , அதை தப்பு இல்லாது சொல்ற போட்டி நடத்தி சீரியஸா விளையாடினாங்க அப்பவே நினைச்சேன் நீ , ஜெயித்து விட்டாய் .... என்று என என்னைப் பாராட்டினார். அப்படி இந்தப் பட டைட்டிலும் நிச்சயம் எல்லோரையும் பேச வைக்கும்.

மோடி அரசு கொண்டு வந்த டீ மானிஸ்ட்ரேஷனுக்கு முன்பு ., தமிழ் சினிமா, தென் இந்திய சினிமா நல்லா இருந்தது .டிமானிஸ்ட்ரேஷனுக்கு அப்புறம் 500 சிறுபட புரடியூசர் காணாமல் போயிட்டாங்க ... அப்படித்தான் விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு ... எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்கவுடாமல் பண்ணுது. ஒரு படம்னா டீஸர், டிரைலர் , ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு இந்தப் படத்துல இது இருக்கு .... அது இருக்குன்னு ....சொல்லி ரசிகர்களை அழைக்கிறாம். ஆனா , திடீர்ன்னு எட்டு வழிச்சாலை போடுவோங்கிறது இந்த அரசாங்கம் . 8 வழி யார் கேட்டா ? 8 வழிச்சாலைக்கு அவசியம் என்னன்னும், அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும் ? யாருக்கெல்லாம் பயன் ...? அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல...? சினிமா விழா எடுத்து ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பது மாதிரி 8 வழி ஏன்னு ...? சொல்லு. ஏன் சொல்ல மறுக்கிறாய் ..? இதற்கெல்லாம் பதில் சொல்லாத இந்த அரசாங்கம், எந்தளவுக்கு கேடுகெட்ட அரசாங்கம் என்றால் ., 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக 8 வழிச்சாலை போடத் துடிக்குது. கோவை சிறுவாணி தண்ணீய தனியாருக்கு விற்க பார்க்குது . காத்து, ஆக்ஸிஜன் விற்கப் போகுது. அடுத்து தாய்பாலையும் மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தர முயற்சிக்கும் .தமிழன் முழித்திருக்கும் போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப் பார்க்கிறது. தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது. கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் " மேக் இன் இண்டியா" திட்டம் என்கிறார்கள். நீ என்ன வெங்காயம் விற்க , மயிர் புடுங்க .. ஆட்சி நடத்துகிறாய் ? ஏழு லட்சம் கோடி என்ன செலவு செய்தீர்கள் ? 5 பைசா பொது மக்களக்கு வந்ததா..? சினிமா நாசம் , விவசாயம் நாசம் , எல்லாம் நாசம் . இது தான் மத்திய அரசி