கைதி படம் திரைவிமார்சனம்

கைதி படம் திரைவிமார்சனம்
கைதி படம் திரைவிமார்சனம்
கைதி படம் திரைவிமார்சனம்

Directed by  :  Lokesh Kanagaraj
Produced by:    S. R. Prakashbabu ,S. R. Prabhu, Tiruppur Vivek
Starring       : Karthi,Narain,Dheena
Music by     :Sam C. S.
Cinematography  :  Sathyan Sooryan
Edited by     :   Philomin Raj

 

ஒரு போதை கடத்தல் கும்பல் சென்னைக்குள் பெரிய அளவில் போதை மருந்துகளை கடத்த முயற்சி செய்கிறது. இதனை நேர்மையான காவல் அதிகாரி நரேன் தடுத்து அந்த கடத்தல் வாகனத்தை சீஸ் செய்கிறார். சுமார் 850 கோடி மதிப்பிளான 900 கிலோ போதை மருந்துகளை சீஸ் செய்த போலீஸ் அதிகாரி நரேன்-யை கொன்று, போதை மருந்தினை திருப்பி கொண்டு செல்ல கடத்தல் காரர்கள் போராடுகிறார்கள். ஒரு லாரியில் அந்த போதை மருந்தினை வைத்து அதனை ஒரு நாள் பாதுகாத்து, விடிந்ததும் அதனை அரசாங்கத்திடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார் நரேன். அதற்குள் நரேன்-யை கொன்று அந்த லாரி-யினை கொண்டு செல்ல சென்னை முழுவதும் ரவுடிகள் மற்றும் கடத்தல் காரர்கள் என அனைவரும் புறப்படுகின்றனர்.

சிறையில் 10 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் கார்த்தி, தனது 10 வயதான மகளை பார்க்க வேண்டும் என சிறைக்குள் ஏங்குகிறார். இவர் தன் மகளை பார்ப்பதற்கு சிறையில் இருந்து வெளியே வரும் கார்த்தியை போலீஸ் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்கிறது. பின் போலீஸ் மற்றும் கடத்தல் காரர்களுக்கு நடக்கும் போராட்டத்தில் காவல் துறையினர் பாதிக்கப்படுகின்றனர்.

அந்த நேரத்தில் கார்த்தியிடம் உதவி கேட்டகிறார் நரேன். நரேனின் அழைப்பை ஏற்று கார்த்தி உதவுகிறார். 

கார்த்தியும் நரேனும் போதை பொருட்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்தாரா? கொள்ளைகாரர்களை எப்படி தடுத்தார்கள் என்பதை விறுவிறுப்புடன் இயகியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.