இனி வெடி சத்தம் வேகமா இருக்கும்..! - தனுஷின் அடுத்தப்படம் குறித்த அப்டேட்

இனி வெடி சத்தம் வேகமா இருக்கும்..! - தனுஷின் அடுத்தப்படம் குறித்த அப்டேட்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நவ.29ம் தேதி வெளியானது.

இதனைத் தொடர்ந்து தனுஷ், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘D40’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் பிரிட்டிஷ் ஆக்டர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்கலில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

லண்டனில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய நடிகர் தனுஷ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகளில் இணைந்தார்.

'எதிர் நீச்சல்', 'கொடி' படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் ‘பட்டாஸ்’ திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இணை இசையமைக்கின்றனர்.

‘பட்டாஸ்’ திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் குறித்து முக்கிய அறிவிப்பை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளது. இப்படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.