அப்பா வழியில் மகன்.. நடிப்பை தாண்டி அடுத்த கட்டம் போகும் துருவ் விக்ரம்

அப்பா வழியில் மகன்.. நடிப்பை தாண்டி அடுத்த கட்டம் போகும் துருவ் விக்ரம்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தின் அத்தனை டெக்னிசியன்களும் நடிகர்களுக்கும் நடிகர் விக்ரம் நன்றி தெரிவித்து, இந்த படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் அதில் நானும் ஒருவன் என்று பேசினார்.

மேடையிலேயே விக்ரமும், துருவ் விக்ரமும் இருந்ததால் இருவரும் சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டித்தழுவி பேசிக்கொண்டனர். மேடையில் ஒருவர் ஆதித்யா வர்மா படத்தில் வரும் ஒரு பாடலைப் பாடுமாறு கோரிக்கை வைக்க விக்ரமும் விக்ரம் மகனும் இருவரும் சேர்ந்து ஒரு பாடலை பாடினார்கள்.

அதை பார்த்த ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்ட அரங்கமே அதிர்ந்து போனது. இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரமின் முதல் படம் என்பதால் விக்ரம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது ஏற்கனவே தெலுங்கில் எடுக்கப்பட்ட அர்ஜுன்ரெட்டி மிகப்பெரிய வெற்றி அடைந்தது இந்தியில் கபீர் சிங்கும் வெற்றியடைந்தது. தமிழில் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் துருவ் விக்ரம் உண்மைலேயே நன்றாக பாடுவாராம்.